வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்பி, போராட்டத்தில் கலந்த கொண்டு கைது செய்யப்பட்டார்.