அரியலூர் மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த சட்டத்திருத்த 4 தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும்.மின் திருத்த மசோதவை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயாக்குவதை தடுத்த நிறுத்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரியலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சிபிஐ பி.பத்மாவதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்(கிழக்கு)இரா.கதிர்வளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில்சிபிஐநிர்வாகிகள்டி.தண்டபாணி,இரா.உலகநாதன்,சொ.இராமநாதன், ஜி .ஆறுமுகம், து.பாண்டியன், சிபிஎம் நிர்வாகிகள் இர.மணி வேல்,எம் வெங்கடாசலம், பி.துரைசாமி, வி பரமசிவம்,கே கிருஷ்ணன், அ.அருண்பாண்டியன், விசிக நிர்வாகிகள் பெ.அன்பானந்தம், செ.வே. மாறன், பெ. மு .செல்வநம்பி,ஏ எஸ் ஆர் மதி, ம.கருப்புசாமி, மு தனக்கோடி, சி சுதாகர், ம.இந்திரா காந்தி, க.இலக்கிய தாசன், சி பி ராஜா, சி.செல்வராசு,கண்.கொளஞ்சி,சிவ.குழலரசன் உள்ளிட்ட நிர்வாகள் திரளாக கலந்து கொண்டனர்.




