கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் முன்பு மௌன அஞ்சலி செலுத்தியும், மெழுகு பற்றி ஏற்றியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி. கே (RGK) தலைமையில், நிறுவனர் ராஜ்குமார், மாநில செயலாளர் ஹரிஹரன் வழிகாட்டுதலில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மாநகர செயலாளர் ராஜேஷ், மாநில இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் அணி தலைவர் அர்ஜூன், மகளீர் அணி பாத்திமா ஜூலி, சதாசிவம், கண்ணன், சிங்கராஜ், ரவி, studio தேவராஜ், பாபு, வாசுதேவன், சசிகுமார் , மணிகண்டன் சேதுபதி, நாகராஜன் முருகேசன், ராஜ்குமார் ஸ்ரீபுவனேஷ் , பிரபு மற்றும் பலர் பங்கேற்றனர்.
