நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி, மாவட்ட முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, இன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர்களான பாலகுரு, ரத்தினவேல், ஹமர்தீன், மைக்கேல், கோபிநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் கவிதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பாசறை பொறுப்பாளர்களான கோகிலா, செல்லம்மாள், ஜான்சி ராணி, மற்றும் செய்தி தொடர்பாளர் சத்தியசீலன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் சரவணன், பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் சரவணன் பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் நன்றி உரையாற்றினார். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
