திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் குமார் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் , ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்க ,இந்திய தேசிய காங்கிரஸ் ,தமிழர் விடியல் கட்சி ,இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் பொறுப்பாளர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, உடனடியாக ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.