• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை..,

ByK Kaliraj

Oct 29, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என மேலதாயில்பட்டி, கட்டணஞ்செவல், கலைஞர் காலனி, உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

கலைஞர் காலனியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 30 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடையின் உரிமையாளர் ஞானசுந்தரி (வயது 60 ) என்பது தெரிய வந்தது உடனடியாக போலீசார் ஞானசுந்தரியை கைது செய்தனர்.