விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில் விநாயகர் சிலைகள் வித்தியாசமான வடிவமைப்பில் அருள் பொருள் அருளும் கணபதி மங்கல கணபதி மற்றும் விஜய கணபதி ஆனந்த சயன கணபதி ஆனந்த கணபதி என பல்வேறு வடிவத்தில் விநாயகர் செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்று தருமபுரம் தெருவில் சிலையில் வைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்னதானம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியன இன்று காலையில் ஐந்து ஏழை மணமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பெயரில் சிவகாசி ஏ டி எஸ் பி இராஜபாளையம் டிஎஸ்பி ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி மற்றும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.