அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி 54வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் 54 -நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, பிரியாங்கா காந்தியின் 54 வது பிறந்தநாளை, டிசம்பர் 20 தொடங்கி ஜனவரி 12 வரை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆ.சங்கர் ஆலோசனையின் பேரில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.ஆர்.பாலாஜி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

54 -வது பிறந்தநாளில் 54 -நலத்திட்டங்கள் என்னும் அடிப்படையில் , அரியலூர் மாவட்ட முழுவதும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் .10 11 12 -ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை, கல்லூரி மாணவர்களுக்கு பிரியங்கா காந்தி பெயரில் உதவி தொகை,இளம் விவசாயிகளுக்கு மண்வெட்டி,இயற்கைஉரங்கள்,தென்னங்கன்றுகள் வழங்குதல்,பெற்றோர்கள் இல்லாத குழ்ந்தைகளுக்கு புத்தாடைகள்,நோட்டு புத்தங்கள் வழங்குதல்,அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் பிரியங்கா கந்து மாலை நேர டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,டிபன் பாக்ஸ் வழங்குதல்,முதியவர்களுக்கு போர்வை மற்றும் உடைகள் வழங்குதல்,அங்கன்வாடி பள்ளிகளுக்கு தேவையான மின்விசிறகள்,எடை கருவிகள்,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி நிற புத்தாடைகள் வழங்குதல்,முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குதல்,பனைவிதைகள் விதைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் மூத்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்கோலஸ்ராஜ், அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த மாவட்ட பொது செயலாளர் சாம் வர்கீஸ், மாவட்ட துணை தலைவர்கள் ஆனந்த ராஜ்,சுண்டக்குடி கலைவாணன்,சட்டமன்ற தொகுதி தலைவர்கள் ஜான்,ஜெயப்ரகாஷ்,கார்த்திகேயன்,நக்மா,வட்டார தலைவர்கள் பாரதி,தினேஷ்,அருண் நகர தலைவர்கள் நியூட்டன்,ஆனந்த்,அருண்,விஜய், ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட முழுக்க நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




