• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் வாடிவாசல் வர்ணம் பூசும் பணியுடன் துவக்கம்..,

ByKalamegam Viswanathan

Jan 2, 2024

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் இரண்டாம் தேதி ஜனவரி 16ஆம் நாள் நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அழைப்பிதழ் அச்சடித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல் பகுதியில் வர்ணம் பூசும்பணி துவங்கியது. வாடிவாசல் பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வர்ணம் பூசும்பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் கூறியதாவது:
நீதிமன்றத்தில் அரசாணை பெற்று தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி. தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சட்ட விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகள் மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறையாக வரிசையாக களம் இறக்கப்படுவர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு அரசு முதலமைச்சர் சார்பாக ஒரு கார் ஒன்றும் இரண்டாவது பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு அப்பாச்சி பைக் ஒன்றும். சிறந்த காளை மாட்டிற்கு முதல் பரிசாக வைக்கும் இரண்டாவது பரிசாக நாட்டு பசு மாடு வழங்கப்படும். இது தவிர தங்க காசு பீரோ மிதிவண்டி உள்ளிட்ட விளைவு உயர்ந்த பரிசுகள் பல வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தனர். சமயநல்லூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.