• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமா..,

BySeenu

Jun 29, 2025

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் கண்டுகளித்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பார்வையாளர்களிடம் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடி படம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராம், இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்ததாகவும் அதேபோல் பல்வேறு இடங்களில்
அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்.

இந்த படம் குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்வும் பெற்றோர்களுக்கு தான் என கூறினார். All Appas Are Liars குட்டி குட்டி பொய் சொல்ல கூடிய அப்பாக்கள், குடும்பத்திற்காக பர்சில் உள்ள பணத்திற்கு ஏற்ப பொய் சொல்ல கூடிய அப்பாக்கள் அதே சமயம் Daddy எல்லோரும் பாவம் என்றார். இது குறித்து நான் சிறுவர்களிடம் கேட்டபோது கூட அப்பாக்கள் தான் பொய் கூறுகிறார்கள் அம்மாக்கள் பொய் கூறவில்லை என்றார்கள் என தெரிவித்தார்.

நா.முத்துக்குமாரை அனைவரும் மிஸ் செய்கிறோம் என்றும்
ஜூலை 19ம் தேதி நா.முத்துகுமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடத்துகிறோம் என்றார் அந்த விழா அவரின் புகழை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் என தெரிவித்தார்.

மலை ஏறினால் மகத்தான விஷயங்கள் கிடைக்கும் என்றார். நடிகை அஞ்சலி எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர் இந்த படத்திலும் நடத்துள்ளார் என்றார். Realistic படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். மக்கள் பிரமாண்டம் என அனைத்தையும் விரும்புவார்கள் என்றார். மேலும் மக்கள் சுவாரஸ்யம் நிறைந்தது கவலைகளை மறப்பது போன்ற படங்களை ஏற்று கொள்கிறார்கள் என்றார்.

உச்சபட்ச நடிகர்கள் அழைத்தால் படம் செய்வேன், ஆர்வம் உள்ளது என்றார்.
மேலும் Box office கண்டிப்பாக வேண்டும் Hotstar பணம் கொடுத்தார்கள் நான் எடுத்தேன் என தெரிவித்தார்.

நடிகர்கள் போதை பொருட்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. பெற்றோர்கள் அவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றார்.