கரூரில் துயரச்சம்பவம் எதிரொளியாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்த வண்னம் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நிறைமாத கர்பிணி ஒருவர் வெளி நேயாளிகள் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்தார் அவர் பிரசவதிர்க்காக அட்மிடாக வேண்டும் என்று கூறியும் நீண்ட நேரமாக காத்திருந்து அவஸ்தைகுள்ளானார்.பின்னர் செய்தியாளர்கள் காவல்துறையினருடன் பேசி கர்ப்பிணியை மருத்துவமனை அவசர பிரிவுக்கு உள் நுலைய அனுமதி பெற்றுத்தந்தனர். காவல்துறையினரின் கெடுபிடிகளாக் சாதாரண நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.