• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க, பள்ளி மாணவ, மாணவிகள் செய்த பிரார்த்தனை….

BySeenu

Nov 23, 2023

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க கோவையில் பள்ளி மாணவ,மாணவிகள் செய்த உருக்கமான பிரார்த்தனை…,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென சுரங்கப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களும் வெளியில் வர முடியாதப்படி சுரங்கத்திற்குள் சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணி 12வது நாளாக நீடித்து வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்பது மீட்பு குழுவினர் சுரங்கப்பாதைக்குள் செலுத்திய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது..இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் மாணவ,மாணவிகள் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக திரும்ப வேண்டி அனுமன் சாலிசா திருமந்திர பாராயணத்தை பாடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிறிய பள்ளி குழந்தைகள் முதல் மேல் நிலை பள்ளி மாணவ,மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆசிரியைகள் இணைந்து அனுமன் சாலிசாவை ஏழு முறை இணைந்து பாடினர்.திருமந்திரத்தை மாணவ,மாணவிகள் பாடுகையில் பின்னனியில் உத்த்காண்ட் நிலச்சரிவு புகைப்படங்களை கண்டவாறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.