• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பிரச்சினைக்கு தீர்வுடன் வரவில்லை’ – ப.சிதம்பரம்

ByA.Tamilselvan

Apr 28, 2022

காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரசாந்த் கிஷோர் எவ்வித யோசனைகளையும் முன்வைக்கவில்லை. என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகள் பிரசாந்த்கிஷோர் வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றன. இந்நிலையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தங்கள் கட்சியில் இணையுமாறு பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பும் விடுத்தது. ஆனால், அதனை அவர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் அளித்தப் பேட்டியில், பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்கள் தான் வைத்திருந்தார். தலைமை பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் கொடுத்த தரவுகள் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. எங்க கட்சியிடம் அத்தகைய தரவு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அழகாக தரவுகளை மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிக்கு வழங்கியிருந்தார். மேலும் காங்கிரஸுடன் ஒப்பந்தம் போட்டபின்னரும் கூட திரிணமூல் காங்கிரஸ், டிஆர்எஸ், திரிணமூல் கட்சிகளுக்கும் பணியாற்றுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்று கூறியுள்ளார்
பிரசாந்த் கிஷோரின் குறித்து ப.சிதம்பரம் கருத்து வேறுமாதியாக உள்ளி நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பர்ம் கூறிய கருத்து வேறு மாதிரி உள்ளது. “பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது முக்கியம் கிடையாது என்றும், கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. எனவே, கட்சி செயல்பாட்டில் மாற்றம் வர வேண்டும். எனவே, பிரசாந்த் கிஷோர் கூறும் யோசனைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்த வேண்டும் அப்போதுதான் கட்சியில் மாற்றம் வரும்” என்று கூறியுள்ளார்.