• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

ByR. Vijay

Apr 24, 2025

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 88 )முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 38 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் வாடிகன் திரும்பினார். பின்னர் கடந்த வாரம் நடந்த புனிதவார பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார். கடைசியாக ஈஸ்டர் வழிபாட்டில் கலந்து கொண்ட அவர் நிகழ்வில் பங்கேற்ற மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால் 21-ந்தேதி அவருக்கு திடீரென பக்கவாதம் தாக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதயம் சசெயலிழந்தை தொடர்ந்து உயிர் பிரிந்தது. அவரது உடல் வாடிகன் நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு உலகத் தலைவர்கள் பல சமய தலைவர்கள் கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த 21-ந்தேதி அவருடைய வயதை குறிக்கும் வகையில் 88 முறை மணிகள் ஒலித்தன.தொடர்ந்து போப் ஆண்டவரை 26 -ந்தேதி நாளை (சனிகிழமை) அடக்கம் செய்ய இருப்பதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் பேராலய முகப்பிலிருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலமானது கடற்கரைச் சாலை வழியாக சென்று ஆரியநாட்டு தெரு சர்ச் சாலை வழியாக தியான மண்டபம் செல்லும் சாலை வழியாக சென்று மேல்கோவில் பகுதியில் நிறைவடைந்தது.இதில் திரலான பக்தர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெபித்தனர். ஊர்வலத்தில் அருள் சகோதரிகளும் பொதுமக்களும்,பக்தர்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்துக் கொண்டு சென்றனர்.