• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன்- 2 ரீலிஸ் எப்போது..? மணிரத்னம்

ByA.Tamilselvan

Sep 23, 2022

பொன்னியின் செல்வன் முதல்பாகம் அடுத்த வாரத்தில் வெளிவரும்நிலையில் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. ‘
படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன் 2’ அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.