கன்னியாகுமரி தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் விழாவில். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்டம் சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் ஆகியோர் பங்கேற்றனர்.

பொங்கல் விழாவில் முதல் நிகழ்வாக. புதுப்பானைகள் 50_க்கும் அதிகமான பானைகளில். கல்லூரி மாணவியர்கள், பெண் பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் விட்ட பானைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இணைந்து, பானையில் புத்தரிசையையும், சர்க்கரையும் ஒன்றாக கலக்கும் வகையில் அகப்பை கொண்டு கிளரிவிட்டார்கள்.
கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உரியடியில்(பானை உடைத்தல்) விளையாட்டை பார்த்த வெளிநாட்டு இளம் பெண் அவரும் பானையை உடைக்கும் விளையாட்டில் கலந்துக்கொள்ள விரும்பியவரிடம். சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அந்த விளையாட்டுப் பற்றிய விளக்கங்களை சொல்லிக்கொடுத்த நிலையில் வெளிநாட்டு இளம் பெண் பானை உடைக்கும் உரியடி நிகழ்வில் பங்கேற்று.
கண்களில் துணி கொண்டு மறைக்கப்பட்ட நிலையிலும், லாவகமாக பானையை உடைந்து அனைவரின் கை ஒலி ஓசையில் மகிழ்ச்சி அடைந்தார்.
மாணவிகளின் பரதநாட்டியம், மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் நிகழ்வுகள் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில். சிகரம் வைத்தார் போன்று.
சிறப்பு விருந்தினர்களரான மேயர் மகேஷ், அ.தி.மு.க., கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப., கல்லூரி தலைவர்
வழக்கறிஞர் பாலமுருகன், செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் மகேஷ், கல்லூரி பல்துறை பேராசிரியர்கள் ஒருபக்கம். மறுபக்கம் மாணவர்கள் என
வடம் இழுக்கும் போட்டியில். சிறப்பு விருந்தினர்கள் காட்டிய உற்சாகம் வேகத்தில் மாணவர் பகுதி தோல்வி கண்டதும் கூடி நின்று வடம் இழுக்கும் போட்டியை உற்சாகமாக பார்த்த மாணவர்கள், விருந்தினர்கள் கூட்டம் உற்சாகம் மிகுதியில்’ கை’ ஒலி எழுப்பி வெற்றிபெற்ற அணியினரை மகிழ்வித்தார்கள்.

மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், சப் கலெக்டர் ராகுல் குமார்.இ.ஆ.ப, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு,அ.தி.மு.க., செயலாளர் தாமரை மகேஷ், நாதசுவரம் கலைஞர்கள் குழுவினர் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமரி சுற்றுலா துறை அதிகாரி காமராஜர் நினைவு பரிசுகளை வழங்கினார்.





