குமரி சுற்றுலா துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில்
பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்றரர்.
தமிழக சுற்றுலா துறை, குமரி மாவட்ட நிர்வாகம், விவேகானந்தர் கலைக் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகள் செங்கரும்புடன், புதுப்பானையில் பொங்கலிட்ட இந்த விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டார்கள்.

குமரி ஆட்சியர் அழகு மீனா புதுப்பொங்கல் பானை அடுப்பை பற்றவைத்து பட்டாம் பூச்சியாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மூன்று செங்கல்களால் உருவாக்கப்பட்ட அடுப்பில் பொங்கலிட்டார்கள்.

மாணவர்கள் பங்கேற்ற கயறு இழுக்கும் போட்டியையும், வெளிநாட்டவர் பங்கேற்ற உரியடி விளையாட்டையும் ஆட்சியர் அழகு மீனா தொடங்கி வைத்ததுடன். உரியடியில் பங்கேற்ற வெளிநாட்டவரை பாராட்டி ஆட்சியர் அழகு மீனா பரிசு வழங்கினார்.


குமரி சுற்றுலா துறையின் அதிகாரி காமராஜ், சுற்றுலா துறையை சேர்ந்த அதிகாரிகள் பணியாளர்கள், விவேகானந்தா கலைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பொங்கல் விழாவில் பங்கேற்று மாணவர்களின் பல்வேறு கலைத்திறனை பாராட்டினார்கள்.
