கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தேமுதிக கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்குசாடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கழக கொள்கை பரப்பு செயலாளர் கோவை மண்டல தேர்தல் பொருட்பாளர் அலங்காபுரம் மோகன்ராஜ் பேசுகையில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்குசாவடி முகவர்கள் பட்டியலை கழகத்திடம் ஒப்படைப்பது, ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வது, மாநாடு குறித்தான சுவர் விளம்பரங்கள் ஓட்டுவது கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் வளர்ச்சிக்காக பாடுபடுவது குறித்தான பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன.

தேமுதிக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கைk சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு செயலாளர் கோவை மண்டல தேர்தல் பொறுப்பாளர் அலங்காபுரம் மோகன்ராஜ் ,துணை பொறுப்பாளர்கள் கணேஷ் உட்பட மாவட்ட பொறுப்பாளர் விஜய் வெங்கடேஷ் தொகுதி பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ் , ஜெயகுமார் ராகவலிங்கம்,மாவட்ட அவைதலைவர். P. பொன்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பழனி, சண்முகம், அரவிந்த் மற்றும் பகுதி கழக செயலாளர் சர்தார் ,கேப்டன் குணா ,வல்லரசு ,நாகராஜ், செல்வம்,தண்டபாணி,
பன்னீர்செல்வம், அழகர் செந்தில், மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்P.N. சரவணகுமார் தொழிற்சங்க செயலாளர் நீ னா வேலுச்சாமி ,கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, சந்திரா உட்பட ஏராளமான மகளிர் அணியினர் வார்டு செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் கிளை கழக வாக்குச்சாவடி முகவர்கள் அனைத்து அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் .