• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசியல் டுடே செய்தி எதிரொலி… தோண்டப்பட்ட பள்ளங்கள்! ஆக்ஷனில் இறங்கிய மதுரை மாநகராட்சி கமிஷனர்…..

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

செய்தி எதிரொலி மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை சரி செய்யப்பட்ட பள்ளங்கள் செய்தி வெளியிட்ட அரசியல் டுடே செய்தி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவியும் பாராட்டுக்கள்..,

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர், நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இது மாநகராட்சி பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதி என இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டு பணிகள் ஆனது நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்பட்டு மழை நேரங்களில் மாநகராட்சி பகுதிகளில் சரிவர சிமெண்ட் கலவைகள் கொண்டு மூடாமல் இரு சக்கர வாகனங்கள் முதல் கார்கள் உள்ளிட்டவே பள்ளத்தில் பதிந்து சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் காயம் ஏற்பட்டு கார்கள் பள்ளத்தில் பதிந்தும் தொடர் கதையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் கார் ஒன்று அதில் மாற்றிக்கொண்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அந்த காரை அப்பகுதியினர் விட்டனர்.

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு நமது அரசியல் டுடே செய்தி மூலமாக செய்திகான லிங்கை நாம் அனுப்பி வைத்தோம். அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் அதிரடியாக களத்தில் இறங்கிய மதுரை மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை உடனடியாக சேதமடைந்துள்ள பாதையை சரி செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையினை சீரமைத்துக் கொண்டு வருகின்றனர். செய்தி வெளியிட்ட 2 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்த மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கும் செய்தி வெளியிட்ட அரசியல் டுடே பத்திரிக்கை நிறுவனத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.