தாம்பரம் மாநகர காவல் ஆணையர பகுதிகளான தாம்பரம் குரோம்பேட்டை பள்ளிக்கரணை கூடுவாஞ்சேரி மறைமலை நகர் செம்மஞ்சேரி உட்பட்ட பகுதிகளிலும், அதேபோன்று கல்வி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலும் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையினருடன் சேர்ந்து கூட்டாக போதைபொருள் விற்கும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்,

240,கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, கூல் லீப்,ஆன்ஸ் உள்ளிட்ட போதை பொருகள் பரிமுதல் செய்யப்பட்டது, மேலும் போதை பொருள்களின் கலவை தயாரிக்க பயன்படுத்திய மிக்சி, கிரைண்டர்களையும் பரிமுதல் செய்த நிலையில் 40,பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சேலையூர் காவல் நிலைத்தில் செய்தியாளகளிடம் காட்சிபடுத்திய நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் பேசினார்:- போலீசார் ஏற்கனவே தொடர்ச்சியாக போதை பொருள்கள் விற்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஆகஸ்ட் 2முதல் 11,வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினருடன் கூட்டாக காவல் துறையினர் சோதனை செய்ததில் 240,கிலோ போதை பொருள்கள் கைப்பற்றப் பட்டு 40,பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்.

அவர்கள் மூலம் முக்கிய மொத்த விற்பனையாளரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை பயன் படுத்தி விஷத்தன்மையுள்ள போதை பொருளை தயாரித்து விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.