• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜக பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பு..,

ByVasanth Siddharthan

Apr 15, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்தும், மும்மொழி கொள்கை குறித்தும் விளக்கம் அளிக்கும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்து நீதி மன்ற விசாரணை இருப்பதாலும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதுபோல் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை புதூரில் பாஜக நிர்வாகி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு காவல்துறையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டியளித்த போது…

தமிழ்நாடு அரசின் காவல்துறை வக்ஃபு வாரிய சட்டம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை இருப்பதை காரணம் காட்டி பாஜகவின் பொது கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மீண்டும் இதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவோம் என கூறினார்.