• Fri. Apr 26th, 2024

விண்வெளியில் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம்..!

Byவிஷா

Sep 10, 2022

விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா எனப் பல உலக நாடுகள் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பபடுகிறது. ராக்கெட் பூமிக்கு திரும்ப வந்துவிடுகிறது. இந்நிலையில் வழிகளில் ஏற்படும் கோளாறு, செயலிழப்பு அல்லது ராக்கெட் அங்கேயே இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் விண்வெளியில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பல்வேறு நாடுகள் விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்புகின்றன. விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்த ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இந்த மாதம் நடத்தப்படும் கூட்டத்தில் விண்வெளி குப்பைகள் குறித்த பிரச்சினைகளை விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விண்வெளி பாதையில் சுற்றும் குப்பைகளால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு புதிய விதிகளை அறிமுகப்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறைந்த அளவு சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை நிர்வகிக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது நமது கிரகத்தில் இருந்து ஏறக்குறைய 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிர்வகிக்க உள்ளது.
புதிய எஃப்.சி.சி விதிகள், செயற்கைக்கோள்களின் பணிகள் முடிந்ததும் அவற்றை சுற்றுப்பாதையில் பராமரிக்க தேவைப்படும் கால அளவைக் குறைக்கலாம். புதிய விதிகள் 2004ஆம் ஆண்டின் விதிகளிலிருந்து திருத்தம் செய்யப்பட உள்ளது. “செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள் மற்றும் பிற குப்பைகள் விண்வெளியில் குவிந்து கிடக்கின்றன. இவை எதிர்காலத்தில் அனுப்பப்படும் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும். சவால்களை உருவாக்குகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 4,800 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இயங்கி வருகின்றன. விண்வெளியில் சுற்றுகின்றன என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *