அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை புதிதாக அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

பள்ளியின் விளையாட்டு திடலின் கிழக்கு பகுதியில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் வெளிநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதோடு, மாணவர்களும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் அந்த வழியாக பள்ளிக்குப் புறம்பே செல்வது நடைபெற்று வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் மீது ஏறி வெளிநபர்கள் உள்ளே நுழைவதால் மாணவர்கள், ஒழுக்கத்திற்கு கேடு மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், கிழக்கு பகுதியில் புதிய சுற்றுச்சுவர் அமைத்து தரவும், வடக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்து, அதன் மேல் இரும்புக்கம்பிகளுடன் கூடிய முள்வேலி அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு தலைவர் சே. சுதா, துணைத் தலைவர் சி. அன்பரசி, தலைமையாசிரியர் P.கவிதா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)