கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வாடகைக்கு வரக்கூடாது என்றும் உதகையிலிருந்தும் வாடகை ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்பொழுது உதகை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கவேலை தாக்கியுள்ளனர். அதனால் தங்கவேல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் கோவையை சேர்ந்த சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.









; ?>)
; ?>)
; ?>)
