சாக்கடை கழிவு நீர் சிங்காரத் தெரு குட்டைக்குள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுத்திட அரியலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என ஏஐடியூசி சார்பில், மக்கள் குறைந்தீர் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது,மாவட்டகலெக்டரின்,நேர்முக உதவியாளர் பரிமளம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளரும் ஏஐடியுசி தொழிற் சங்க மாவட்டப் பொதுச் செயலாளரு மான டி தண்டபாணி நேரில் சந்தித்து பின் கண்ட கோரிக்கைகள் அடங்கிய தனித்தனி மகஜரை அளித்தார். உடன் அரியலூர் ஒன்றிய செயலாளர் து. பாண்டியன் மற்றும்வி.உஷாராணி-ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அம்மனுவில்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளாவது அரியலூர் நகரம் சிங்காரத்தெரு தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில்மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குட்டை நெடு நாட்களாக முள் புதர் செடிகள் அடர்ந்து மண்டிக்கிடந்து பாம்பு விஷப்பூசிகள் அச்சுறுத்தி வந்த நிலையில் இதனை சீரமைத்து பூங்கா அமைக்கப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துவலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அரியலூர் நகராட்சி நிர்வாகம் சீரமைக்கும் பணியை ஏனோ தானமாக மேற்கொண்டுள்ளது.
சாக்கடை கழிவு நீர் குட்டைக்குள் செல்வது தடுக்கப்பட வில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது, கரையில் மணல் பரப்பாமல் கரு மண்ணில் அப்படியே கல்பதிக்கும்வேலையை தொடங்க இருப்பது தெரிய வருகிறது. கழிவு நீர் செல்வதை தடுத்து மணல் பரப்பி கல் பதித்திட ஆட்சியர் தலையிட வேண்டும்.
அரியலூர்நகராட்சியில் பொது சுகாதார பணி செய்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை 2(D) 62 – ன் படி நிர்ணய சம்பளமாக நாள் கூலி ரூ 645-ஐ வழங்க மறுத்துவரும் அரியலூர் நகராட்சி நிர்வாகம் திருச்சி விஷன் கேர் சர்வீஸ் ஒப்பந்ததாரர் மூலம் கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நாள் கூலி ரூ.382 மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட நாள் கூலியாக அன் ஸ்கில்டு மஸ்தூர்களுக்கு ரூ. 434 என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். குப்பை அள்ளுவது சாக்கடை தள்ளுவது முள்ளு வெட்டுவது புல்லு செதுக்குவது லாரியில் குப்பையை ஏற்றுக் கொண்டு போய் தொலைதூரம் சென்று கொட்டுவது, அழுகிய காய்கறிகளை வாங்கி வந்து உரம் தயாரிப்பது, அதிகாரி வீட்டுக்கு வேலை செய்வது என பல வேலைகளில் ஈடுபடுத்து படும் இப்பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் எங்குமே இவ்வளவு குறைவாக இல்லாத நிலையில் அரியலூர் நகராட்சியில் இக்குறைவான சம்பளத்தை தொடர்ந்து வழங்கப்படும் போக்கினை கைவிட்டு ஊதியத்தை உயர்த்திட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




