அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ரெ. குருநாதன் (தலைவர் ),இரா இராசாங்கம் (செயலாளர்) ,துரை .பிரகாஷ் (பொருளாளர்) மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் இரா உலகநாதன், தென்கச்சி சொ இராமநாதன், தா.பழூர் ஒன்றிய முன்னாள் துணைச் சேர்மன் மு.அசோகன் உள்ளிட்டோர் தலைமையில்,மாவட்ட கலெக்டர் பொ . இரத்தினசாமியை ,நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர் .அம்மனு வில் குறிப்பிட்டுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெமீன் சுத்தமல்லி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன

இந்த இரண்டு கோயில்களுக்கும் சேர்த்து 180 ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன அந்த கோவில் நிலங்களை சுத்தமல்லி கிராமத்தில் வசிக்கும் சுமார் 200 விவசாயிகள் பன்னெடுங்காலமாக மானாவாரி சாகுபடி செய்து மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.மேற்படி விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமய அறநிலையத்துறை நேரடியாக தலையிட்டு கோயில் நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஆன உறவை சீரமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலத்தில் உழுவடை உரிமையை பாதுகாத்து தருவதற்கு தாங்கள் தக்க உத்தரவு வழங்கி எங்களுக்கு உதவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





