• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடகு கடை உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம்.,

ByKalamegam Viswanathan

May 5, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகா அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் தலைவரும் தொழிலதிபரருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் சோழவந்தான் முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன துணைச்செயலாளர் மீனு ஆனந்த் முருகேசன் நன்றி கூறினார்