பண்டிகையின் ஒன்பதாம் நாளான நேற்று விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி உடன் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது குழந்தைகளை முதன்முதலாக மழலையர் பள்ளியில் பெற்றோர் சேர்ப்பது வழக்கம். அதனை ஒட்டி மதுரையில் உள்ள மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை முதல் முதலாக பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் தங்கள் குடும்பத்துடன் வருகின்றனர்.

மேலும் முதல் முதலாக பள்ளியில் சேர்க்கப்படுவதால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசி நெல்மணிகளில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்டோரின் கைகள் மூலம் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ எழுத வைத்து குழந்தைகளின் படிப்பிற்கான துவக்கமாக பார்க்கப்படுகிறது.