• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம்

Byமதி

Nov 19, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் இந்த வழிபாட்டிற்கு நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தபடி, உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.