மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் அவர்களின் மன உறுதியை கொண்டாடும் நோக்கில் கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு பகுதியாக, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளின் 5வது பதிப்பு புதன்கிழமை அன்று நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர். வினு அரம் அவர்கள் இதில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கோயம்புத்தூர் விழா 2025-ன் தலைவர் சண்முகம், யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பிரிவு தலைவர் நீல் கிகானி, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டி 2025-ன் குழுத் தலைவர் டாக்டர். பிரியா மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.இவர்களுடன் இணைந்து கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச பாரா-வாலிபால் நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரா-வாலிபால் வீரர்கள் சுதாகர் மற்றும் அருள் ஆகியோர் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர், நாமக்கல், தேனி, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவர்களும், 150 பாரா-வீரர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கத் திரண்டனர். சிறப்பு மாணவர்களுக்கு கால் பந்து, வாலி பால், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சைக்கிளிங் போன்ற போட்டிகள் நடைபெற்றது. பெரியவர்களுக்கு வாலிபால், த்ரோ பால், டேபிள் டென்னிஸ், செஸ், பென்சிங் (வாள்வீச்சு) மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அத்துடன், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளின் வெற்றி பெறுவோருக்கும், சிறந்த பாரா-வீரர்களுக்கும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மொத்தப் பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.’நாட்டிய-இசைத் திருவிழா 2025′ என்பது கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 14 ஆம் தேதி முதல் நகரின் பல்வேறு கோவில்களில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கலாச்சாரத் திருவிழா, பாரம்பரிய நடனம் மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றின் சிறப்பான கொண்டாட்டமாக நடக்கிறது. திறமையான பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கண்டு களிக்கலாம்.நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்: சாரதாம்மாள் கோவில்: நவம்பர் 14, 17 மற்றும் 24 ; ராமர் கோவில் : நவம்பர் 15; ரத்ன விநாயகனார் கோவில் : நவம்பர் 16, 18 மற்றும் 20; சித்தி விநாயகர் கோவில் : நவம்பர் 19; தேன் திருப்பதி கோவில் : நவம்பர் 21 முதல் 23 வரை நடக்கிறது.






; ?>)
; ?>)
; ?>)
