• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சித்திரை பெருவிழாவையொட்டி பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா!!

ByM.JEEVANANTHAM

Apr 27, 2025

சித்திரை பெருவிழாவையொட்டி மகா காளியம்மன் கோயிலில் பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தன்குடி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது மகாகாளியம்மன் ஆலயம். இக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இரண்டாம் ஆண்டு பால்குட திருவிழா அதனை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி பக்தகர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, 200-க்கு மேற்பட்ட பக்தர்கள் காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடம் எடுத்து, பம்பை உடுக்கை முழங்க பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.

பின் பக்தர்கள் எடுத்து வந்த பாலை மகா காளியம்மனுக்கு அபிசேகம் செய்து அம்மனை வழிப்பட்டனர்.