டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, சுமார் 12ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள், 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிர்கள், நாகை மாவட்டத்தில் 5,800 ஏக்கர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 12 ஏக்கரில் வெற்றிலை தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
