தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு காளியம்மன் கோவில் காவலாளி தம்பி அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் 07/07/2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மடப்புரம் காளிஅம்மனை தரிசனம் செய்து அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டியும் குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டியும் காளிஅம்மனை வணங்கி விட்டு பின்பு தம்பி அஜித்குமார் இல்லத்திற்கு சங்கத்தின் கௌரவ தலைவர் குணா, பொருளாளர் செல்வம்,செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் தனசேகரபாண்டியன், இணைச்செயலாளர் சௌந்தரபாண்டியன், குமார் மற்றும் மகளிர் அணியினர் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தம்பி அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்பு சங்கத்தின் நிறுவன தலைவரும் வழக்கறிஞருமான திருமதி.கோ.கீதாஞ்சலி அவர்கள் செல்போனில் அஜித்குமார் தாயாருக்கும் சகோதருக்கும் ஆறுதல் கூறினார்.

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் முழு ஆதரவாக இருக்கும் என்றும் சட்டரீதியாக எந்த ஒரு உதவிகளாக இருந்தாலும் எந்த நேரத்திலும் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் எங்களுடைய முழு ஆதரவு தம்பி அஜித்குமார் குடும்பத்திற்கு உண்டு என்பதையும் தெரிவித்து கொள்வதாகவும் மேலும் அஜித்குமார் போன்ற கொடூர கொலைகள் தமிழகத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அஜித்குமார் கொடூர மரணத்திற்கு நீதி கிடைக்க அதற்காக தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு அஜித்குமார் குடும்பத்திற்கு தேவை என்பதால் குற்றத்திற்கு தூண்டுதலாக இருந்த நிகிதாவை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கடினம் என்பதை பெற்ற தாய்க்கு தான் அந்த வலி தெரியும். அஜித்குமாரின் குடும்பத்தினர் மிகுந்த மனஉளச்சலில் உறைந்து இருக்கின்றார்கள். அஜித்குமார் கொடூர கொலைக்கு ஞாயமான நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.
