வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்று தொடர்ந்து வீசி வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக 2 நாட்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையில் இருந்து மிக அதிக கனமழையை எதிர்பார்க்கலாம்.
இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 கி.மீ. என்ற அளவில் இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.