• Sat. Apr 27th, 2024

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு- 16 இடங்களில் தனி அலுவலகம் திறப்பு

Byகா.பாபு

Dec 14, 2022

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் 16 இடங்களில் தனி அலுவலகம் திறந்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை, அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர் , அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.. இதனால் இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையொட்டி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் . இதனிடையே நமது நிலம் நமது விவசாயிகள் சங்கம் சார்பில் சிப்காட் தொடர்பாக தொழில் தொடங்க வருபவர்களை தடுத்து நிறுத்த 16 இடங்களில் அலுவலகம் திறந்தனர். இந்த அலுவலகங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *