அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் இயங்கி வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றும் மேற்கு சீனிவாசபுரம் கிராமங்களின் பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தலா ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அந்நிறுவனத்தின் ஆலைத்தலைவர் ஆர்.பி.முத்தையா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், ஆலை அதிகாரிகள்,கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





