• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்களால் வழிபாடு

BySeenu

Sep 7, 2024

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரமும் பத்து அடி அகலமும் கொண்ட சிலையாகும்.

இன்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டி 50 கிலோ சந்தன காப்பும் இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது அதிகாலை முதலே விநாயகருக்கு 16 வகையான வாசனையை திரவியங்கள் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்க ப்படுகிறது.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.