• Sat. May 11th, 2024

கோவை மதுக்கரையில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய துவக்க விழா..!

BySeenu

Feb 2, 2024

கோவை மதுக்கரையில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வு மைய துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் ஆகிய உபகரணங்கள் வழங்கினார்.

கோவை மதுக்கரையில் அமைந்துள்ள சி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் நைட்டிங்கேல் கல்வி நிறுவனங்கள் சார்பாக, மாவட்ட மாற்று திறனாளிகள் மறு வாழ்வு மையம் துவக்க விழா, நைட்டிங்கேல் கல்லூரி, அன்னை மீனாட்சி கல்லூரி, எண்ணம் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு தீப ஒளியுட்டு விழா, மற்றும் நைட்டிங்கேல் இயன் முறை மருத்துவம், எண்ணம் மருந்தியல் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நடராஜ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நைட்டிங்கேல் கல்வி குழுமங்களின் தலைவர் மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டு, நைட்டிங்கேல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மருத்துவ மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் ஆகிய உபகரணங்களை வழங்கிய அவர், செவிலியர் பணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்புகற் குறித்து பேசினார். தொடர்ந்து, சிறப்பு நிகழ்ச்சியாக நைட்டிங்கேல் கல்லூரி, அன்னை மீனாட்சி கல்லூரி, எண்ணம் கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு தீப ஒளியுட்டு விழாவும் மற்றும் நைட்டிங்கேல் இயன் முறை மருத்துவம், எண்ணம் மருந்தியல் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய சமூக நல அமைச்சகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி NIPMED டாக்டர் மதிவாணன், நர்சிங் சூப்ரிடெண்ட் தங்கமணி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நைட்டிங்கேல் மற்றும் எண்ணம் கல்லூரிகளை சேர்ந்த அனைத்து துறை கல்லூரி முதல்வர்கள் துணை முதல்வர்களும்,துறை தலைவர்கள், ஆசிரியை, ஆசிரியர்களும் மற்றும் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *