மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் வாடிப்பட்டி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக புலவர் வை. சங்கரலிங் கனாரின் ஓமந்தூரார் 100 நூல் வெளியீட்டு விழா வி.எம்.பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். ரெட்டி நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜா பூரணசந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். சர்வோதயா சுந்தர்ராஜன், பால. ராஜேந்திரன், பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக், கௌரா, ராஜசேகர், ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முருகேஸ்வரி வரவேற்றார். இந்த விழாவில் டாக்டர். பொன்.யாழினி பாலாஜி, வழக்கறிஞர் அழகேசன்,
கவிஞர் கார்த்திகா, முரளி, ராமசாமி, ரெங்கசாமி ஆகியோர் பேசினர்.
கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா வாழ்த்துக் கவிதை வாசித்தார். இதில் ரெட்டி இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் மோனிகா சதீஷ், சேகர், ஆதி முத்துக்குமார், வி.சி.க அரசு விஜயார், த.மா.க சரவணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரவை பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டியில் ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா
