• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நிலத்தை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்..,

ByKalamegam Viswanathan

Nov 8, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு நல்லூத்து கருப்பணசாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நன்செய் நிலம் சர்வே எண்.149/1-லிருந்து 149/34 வரையிலான உட்பிரிவுகள் 10.90 ஏக்கர்/செண்ட் (சுமார் 54.50 லட்சம் மதிப்பு) திண்டுக்கல், இணை ஆணையர் அவர்கள் உத்தரவின்படி தேனி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை சரக ஆய்வர் ஆகியோர் முன்னிலையில் சிந்துபட்டி வருவாய் ஆய்வாளர், திடியன் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவையர், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர்களால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் நன்செய் நிலங்களை திருக்கோவில் தக்கார் வசம் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதேபோல இப்பகுதியில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலைத்துறை திருக்கோவில்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் அரசு கையகப்படுத்த முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.