• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கர்நாடகாவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று

Byமதி

Nov 28, 2021

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க உலக சுகாதார நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது தெரியவரும். இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.