• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் எம் எல் ஏ பரிந்துரையின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளராக வாவிடமருதூர் ஆர் பி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து முடுவார்பட்டி முத்துகிருஷ்ணன் புதுப்பட்டி பாண்டுரங்கன் 15 பி மேட்டுப்பட்டி தெய்வம் முடுவார்பட்டி கௌதம் மற்றும் முடுவார்பட்டி ராஜ்குமார் ஆகியோரும் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் வி உதயகுமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர் இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதிநிர்வாகிகள் தொண்டர்கள் சால்வை அணிவித்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.