• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பத்திரப்பதிவுத் துறையில் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்

Byவிஷா

Jul 1, 2024

பத்திரப்பதிவுத்துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பத்திரப்பதிவுத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை வசூலிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைச் சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவினரின் ஆய்வின் அடிப்படையில், திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு வெளியிடப்பட்டது.
இந்த புதிய வழிகாட்டி மதிப்பைப் பொறுத்தவரை கிராமப்புறங்களுக்கான கட்டணத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களுக்கான கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வழி காட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இனி பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.