அரியலூர் .சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,ஆண்டிமடம் ஒன்றியம்,பெரிய கருக்கையில், புதிதாக துவங்கப்பட்ட ஆண்டிமடம் தாலுக்காவிற்கு, ரூபாய் 402.52லட்சம்மதிப்பீட்டில்,2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தினை, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து,வட்ட செயல்முறை கிடங்கில் நடந்த காணொளி காட்சி நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் கே.ராஜா,உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ஷீஜா, செயற்பொறியாளர் ஜி.குணசீலன்,வட்ட வழங்கல் அலுவலர் மீனா,ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரெங்க.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
