• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆர்.ஆர்.கோல்டு மேனுஃபேக்சர்ஸ் மற்றும் whole salers சார்பாக கோவையில் புதிய கிளை துவக்கம்..,

BySeenu

Mar 24, 2025

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆர்.ஆர் கோல்டு மேனுஃபாக்சரிங் மற்றும் whole salers சார்பாக நிர்வாக இயக்குனர் ராகேஷ் ரவீந்திரன் புதிய கிளையை துவக்கி வைத்தார்.

பின்னர் ராகேஷ் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,நாங்கள் இந்த துறையில் சுமார் 36 ஆண்டுக்கும் மேலாக தொழில் செய்து வருவதாகவும், இப்பொழுது ஆன்லைன் மூலமாக தங்கம் வாங்குவதற்கு ஆர்.ஆர்.கோல்ட் மேனுஃபேக்சர்ஸ் சார்பாக அப்ளிகேஷன் உருவாக்கி உள்ளோம். அதன் மூலமாக பர்சேஸ் செய்து கொள்ளலாம் என்றும் மேலும் சின்ன சின்ன ஸ்டாப் பாயிண்ட் உருவாக்க உள்ளதாகவும் இதில் மக்கள் பயனடையலாம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் நிறைய கிளைகள் ஆரம்பிக்க போவதாகவும் சென்னை,கரூர் உட்பட கர்நாடகா,மைசூர் போன்ற மாநிலத்திலும் தொடங்கவுள்ளதாகவும்
எங்களுடைய ஆர்.ஆர். கோல்டின் தலைமை ஆலுவலகம் டெல்லியில் உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குரூப் எக்ஸ்கியுட்டிவ் ராஜேஷ்ராஜன், தலைமை இயக்க அதிகாரி அம்ஜித்மோகன், பிராண்டிங் எக்ஸிகியூடிவ் அன்வர்ரஷீத், எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்ஸ் ராமச்சந்திரன்,பாபுராஜ், சேல்ஸ் எக்ஸிக்யூட்டிங் ஆசிக்,ஜோசப்,சந்தோஷ்,சில்பா என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.