நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கிய நிலையில் இக்கோயிலிலுள்ள எல்லையம்மனுக்கு இன்று பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக இன்று அதிகாலை 12 மணி முதல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் மற்றும் செடில் மரம் ஏறும் வைபவம் மே 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.