கலைஞர் கருணாநிதி அன்று சொன்ன சொல்லான நெல்லை எமக்கு எல்லை.குமரி என்றும் தொல்லை. கலைஞர் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் இன்றும் உயிரோட்டமாகவே இருக்கிறது.
நெல்லை தி மு க வில் குடுமி சண்டை எப்போதும் தீராத நிலையில், நெல்லை மாநகராட்சியின் 7_வது மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவியை இன்று(ஆகஸ்ட்_10) ஏற்றுக்கொண்ட போது. ஆணையாளர் கையால் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்டு பதவிக்கான அங்கியை கொடுப்பது நடைமுறை, நெல்லையின் புதிய மேயராக பதவி ஏற்றுக்கொண்ட கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சற்று வித்தியாசமாக மேயர் பதவியின் அடையாளமான செங்கோல் மற்றும் அங்கியை அவரது தாயின் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டு மேயர் பதவி ஏற்றது. இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களை நெகிழ செய்தது.







; ?>)
; ?>)
; ?>)