மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் இன்று (22.09.25) திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ அவர்களை திருச்சி அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில், “பிளாஸ்டிக் தவிர்ப்போம் – துணிப்பையை எடுப்போம்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், தற்போது பொன்மலையில் நடைபெற்று வரும் வார சந்தை, போக்குவரத்து நெரிசல், சரியான கட்டமைப்பு வசதி இல்லை, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை மேலும் சுகாதார சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கூறி, அதனை அருகிலுள்ள பொன்மலைப்பட்டி வ.உ.சி திடல் பகுதியில் நல்ல கட்டிடம், வாகனம் நிறுத்தம், கழிப்பறை வசதி போன்ற அனைத்து வசதி அமைத்து மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை வைக்கப்பட்டது.