• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

செந்தில் பாலாஜி தான் காரணம் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ByVasanth Siddharthan

Oct 11, 2025

பாரதீய ஜனதா கட்சியின் அணிகளுக்கு புதிய மாநிலத்தலைவர்கள் மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் அறிமுகக் கூட்டம் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் பழனியில் கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எந்தெந்த பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து செய்ய வேண்டிய கட்சி பணிகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக அணிகளின் மாநிலத் தலைவர் கே‌.டி ராகவன், விவசாய அணி தலைவர் ஜிகே நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசும் பொழுது:-

“ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் தேசிய ஜனநாயக கட்சியினுடைய ஆட்சி வந்துவிடும்

கூட்டணி குறித்து ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் அனைத்தும் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

மேலும் திமுக கூட்டணியில் விசிக விற்கும் திமுகவுக்கும் விரிசல் உள்ளது எனவும்,

காங்கிரஸ் அந்த கூட்டணி தொடருமா என்று தெரியவில்லை என பேசினார்.

ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை எதுவும் செய்யவில்லை. அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார்.ஆட்சி மாற்றம் வந்தபின் அனைத்துக்கும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்… என பேசினார்

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல்வர் தருகிறார்…

சாதாரணமாக இறந்த மக்களுக்கு 2 லட்சம் தான் தரப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் கரூர் கூட்டத்தில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்?
கருர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்- எனக்கு குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் தெரிவித்ததாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை சொல்கிறாரோ அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது மாற்றி பேசுகிறார் என்றால் நீங்கள் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறினார். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் 13ம் தேதி தீர்ப்பு வழங்குவது குறித்து கேட்ட போது …முதலில் தீர்ப்பு வரட்டும் என்று தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக அணிகளைடைய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.