• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாயாட்டி திரை விமர்னம்

Byஜெ.துரை

Jun 23, 2023

ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி, இவர்களின் நடிப்பில் நாயகனான ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நாயாட்டி.

ஆதி காலத்தில் அடிமை வம்சமாக இருந்த ஒரு சமூகத்தினர் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் கிராமத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு பயப்பட வேண்டும் என்பதற்காக சில சூனியம் வைப்பதை கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படியாக கிராமத்தில் இருப்பவர்களை பயமுறுத்தவும் மிருகங்களை வேட்டையாடவும் ஆக்ரோஷமான தோற்றத்தோடு திரிந்து வந்தனர்.

காலப்போக்கில் இவர்களே சூனியக்காரியாக வாழ்ந்து வந்தார்கள்.

இவர்களுக்கு சூனியம் வைப்பதுவே தொழிலாக இருந்து வந்தது.

இவர்களைத் தான் நாயாட்டி என்று அழைத்திருக்கிறார்கள்.

சுமார் 800 வருடத்திற்கு பிறகு இக்கால வாழ்வியல் சூழலுக்கு வருகிறது இத் திரைப்படம்

நாயகனான ஆதர்ஷ், நாயகி காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி உள்ளிட்ட ஐவரும் ரிசர்ச் செய்யும் குழுவினர். ஒரு அடர்ந்த காட்டிற்கு பழைய பங்களா ஒன்று இருக்கிறது.

அதை வீடியோ எடுத்துத் தருமாறு இந்த ஐவரை நாடுகிறார் ஒருவர்.

அதற்காக இந்த ஐவரும் அந்த காட்டிற்குள் செல்கின்றனர் அங்கு
முழு நீள கருப்பு உடையில் ஒரு உருவம் அவர்களை பின் தொடர்கிறது.

தொடர்ந்து அந்த அமானுஷ்ய உருவம் ஒவ்வொருவரையும் கொலை செய்கிறது அந்த அமானுஷ்யத்திடம் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்.? இந்த காட்டிற்குள் இவர்களை திட்டம்போட்டு அழைத்து வந்ததன் நோக்கம் என்ன.? என்பதே படத்தின் கதை

கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் படத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்ட கதையானது ஒரு சுவாரஸ்யத்தோடு ஆரம்பித்தது அடடா படத்தின் கதை வேற லெவலில் இருக்கும் என்ற ஆவலைத் தூண்டியது.

இந்த உடம்பில் இருந்து அந்த உடம்பிற்கு செல்லும் கூடு விட்டு கூடு பாயும் முறை என கடைசி 10 நிமிடங்கள் மெய் சிலிர்க வைக்கிறது.. முழுக்க முழுக்க காடு ஓட்டம் கொலை என அடுத்து என்ன என்ன என்று ரசிகர்களிடயே ஆவலை உண்டு பண்கிறது அஸ்வின்ஸ்.

முதல் பத்து நிமிடங்கள் நாயாட்டியின் வரலாறை படமாக ரசிக்கும்படியாக இருக்கிறது யாரும் கூறாத தொடாத கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர்.

படத்தின் இசையமைப்பாளர்
பின்னணி இசைக்கு பலம் சேர்த்துள்ளார்.

மொத்தத்தில் நாயாட்டி– ஒரு தரமான திகில் சம்பவம்